கொழும்பு, நவம்பர் 19, 2026:
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் உலக வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்திப்பு
உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீலகாந்த் மிஸ்ரா பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, வளர்ச்சிப் பாதை, முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் சவால்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதோடு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தல், தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் தொடர்பிலும் இரு தரப்பினரும் முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.







