ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதல்களை “அற்புதமான இராணுவ வெற்றி” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது
வெற்றிகரமாக தாக்குதலை நிறைவு செய்துள்ளோம் என ட்ரூத் சோசியலில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
“ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பர்தவின் முக்கிய தளங்கள் மீது முழு அளவில் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளோம்.
இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.
அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை.
இது அமைதிக்கான நேரம்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் சமாதானத்திற்கு இணங்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.







