தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடக கலைஞர் அமரர் செல்லையா சிவராசா அரங்கில் இன்று (24.06.)செவ்வாய்க்கிழமை,
பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
“இளங்கலைஞர்கள் உருவாகுவது அருகி வருகின்றது. இந்நிலையில் எமது பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதுடன் இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் இவ்வாறான பண்பாட்டு விழாக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.
மேலும், இளைய சமுதாயம் திசைமாறாமல் இருப்பதற்கு அவர்களைக் கலை நிகழ்வுகளை நோக்கி ஈர்க்கவேண்டிய தேவை இருக்கின்றது. அன்றைய நாட்களில் கிராமங்கள்தோறும் பல்வேறு கலை நிகழ்வுகள், கூத்துக்கள் நடைபெறும். இன்று அவையும் அருகிவிட்டன. இளையோரை ஊக்குவித்து அவற்றை மீண்டும் மிளிரச் செய்யவேண்டும்.
இவ்வாறான பண்பாட்டு விழாக்களை கிராமங்களிலுள்ள அரங்குகளில் வைப்பது மிகச் சிறந்தது.”என அவர் மேலும் தெரிவித்தார்.
வேலணை பிரதேச செயலர் க.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாகப் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி நி.லாகினி, ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக சரவணை மேற்கு மூத்த கலைஞர் கலாபூஷணம் ம.கந்தையாவும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடக கலைஞர் அமரர் செல்லையா சிவராசா அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (24.06.2025) நடைபெற்றது.
வேலணை பிரதேச செயலர் க.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி நி.லாகினி, ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக சரவணை மேற்கு மூத்த கலைஞர் கலாபூஷணம் ம.கந்தையாவும் கலந்துகொண்டனர்.











