போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான் மற்றும் இஸ்ரேல்

86
0
Spread the love

 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தற்போது அமுலில் இருப்பதாகவும் இரு தரப்பினரும் அதை மீற வேண்டாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
அதனை மீறியும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர் விமானிகளை நாட்டிற்கு திரும்பச் சொல்லுமாறும் இஸ்ரேலுக்கு
ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here