இந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா 42 வயதில் மும்பையில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஷெஃபாலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது கணவரும், நடிகருமான பராக் த்யாகி, அவரை மும்பையில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது அவர் வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மும்பையில் உள்ள கூப்பர் வைத்தியசாலைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஷெஃபாலியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
வேறொரு வைத்தியசாலையில் இருந்து அவரது உடல் கொண்டுவரப்பட்ட காரணத்தால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான்
அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என அங்குள்ள வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பை – அந்தேரி பகுதியில் உள்ள ஷெஃபாலியின் வீட்டுக்கு விசாரணை மேற்கொள்ள மும்பை பொலிஸார் நள்ளிரவு
சென்றனர். அங்கு தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர்.
ஷெஃபாலியின் மரணத்துக்கான காரணம் குறித்து உத்தியோகப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதை சந்தேக மரணம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், இரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.







