பராசக்தி படத்தின் 2 ஆவது பாடல் வெளியானது

129
0
Spread the love

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் ‘பராசக்தி’. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் திகதி ஜனநாயகனுக்கு போட்டியாக இந்த படம் திரைக்கு வருகிறது.

‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை இரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.

இந் நிலையில் தற்போது பராசக்தி படத்தின் 2 ஆவது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.

https://youtu.be/T_aqaECIWI0si=9snH5MRJUq6DlTpQ

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here