செம்மணியில் ஏழாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

58
0
Spread the love

 

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன.

இதுவரையிலான அகழ்வுப் பணிகளில், முழுமையான 33 மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அகழ்வின்போது, மனித எச்சங்களுடன் மேலதிகமாக, புத்தகப்பை, பொம்மை மற்றும் சிறுவர் பாதணியும் நேற்று மீட்கப்பட்டது.

இந்நிலையில், செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகளை ஒரே வழக்காக இணைக்கும் வாய்ப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பாதிக்கப்பட்டோர் தரப்பில்
கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here