பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் கைது

52
0
Spread the love

 

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த, ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் கைதாகியுள்ளார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அண்மையில் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களைக் கண்டுபிடித்தது.

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட 04 கஞ்சா செடிகளுடன் இந்த விலங்கு பண்ணையின் முகாமையாளர் மற்றும் சேமிப்பாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here