இன்றைய வானிலை

83
0
Spread the love

 

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர்
வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்குமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிகவும்
கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேல் பருவமழை தீவிரமடைந்து வருவதால், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here