பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பதவியில் இருந்து நீக்குமாறு பரிந்துரை

69
0
Spread the love

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குமாறு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசபந்து மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், அவர் குற்றவாளி என ஏகமனதாக கண்டறிந்த, நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கை தனக்குக் கிடைத்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணைமேற்கொண்டு அறிக்கை தயாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்பட்டதுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.

இந்தக் குழு 10 க்கும் மேற்பட்ட முறை கூடி சாட்சியங்களை சேகரித்தது.
மேலும், ஜூலை 16 முதல், குழு தினமும் கூடியதுடன் சாட்சியங்களை சேகரிக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here