செம்மணியில் இன்று மேலும் 04 மனித என்புக்கூடுகள் அடையாளம்

62
0
Spread the love

120 என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள இரு மனித புதைகுழிகளில் இருந்து இன்று (03.08) மேலும் 4 மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முன்னதாக கண்டெடுக்கப்படட 3 என்புக்கூட்டுத் தொகுதிகளும் இதன்போது அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை மொத்தமாக 130 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றில் 120 என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றைய தினம் மதியம் வரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் அருகில் உள்ள பகுதிகளில் புதைகுழிகள் காணப்படுகின்றதா என்பதை அறிந்துக்கொள்ள ஸ்கேன் மூலம் ஆராயப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, இதுவரையில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள், பொதுமக்களுக்கு அடையாளம் காண்பதற்காக காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here