முல்லைத்தீவு – வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தின் மீது வான் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (14.08) அனுஷ்டிக்கப்படுகிறது.
அதற்கமைய, வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதியில், நினைவேந்தலுக்கான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 53 மாணவிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.







