சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்ததாகவும், 04 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் சிச்சுவான் – கிவிங்ஹாய் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, கிவிங்ஹாய் மாகாணத்தில் மஞ்சள் நதியின் குறுக்கே ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரும்புக் கம்பியை இறுக்கும் பணியின் போது, கம்பி அறுந்ததால் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதையடுத்து, பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களும் ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளனர்.
காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.







