வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

225
0
Spread the love

தங்கத்தின் விலையில் இன்று இரு தடவைகள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக

கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று 1.30 க்கு பின்னர் 24 கரட் தங்க பவுண் ஒன்று 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று மாத்திரம் தங்க விலை 7,000 ரூபாவால் அதிகரித்து, தற்பொழுது 300,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக,
கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கபவுண் ஒன்று 300,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 277,500 ரூபாயாக, விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,688 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here