கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அச்சுறுத்தியுள்ளது.
இந்தியாவும் கனடாவும் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவு குழு வியாழக்கிழமை இந்திய தூதரகத்தை கைப்பற்றுவதாகவும், தூதரகத்திற்கு வழக்கமான வருகையைத் திட்டமிடும் இந்திய மற்றும் கனடியர்களை வேறு திகதியைத் தெரிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டது.
இந்திய தூதரகங்கள் காலிஸ்தானியர்களை இலக்கு வைத்து உளவு வலையமைப்பு நடத்துவதை
கண்காணிப்பதாகவும் அந்த குழு குற்றம் சுமத்தியுள்ளது.







