கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் இன்று காலை (29.09)இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






