அர்ச்சுனா எம் பியும் சிறை செல்ல நேரிடும் இளங்குமரன் எம்பி எச்சரிக்கை

95
0
Spread the love

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சிறை செல்ல நேரிடும் என்று இளங்குமரன் எம் பி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.09)வடமராட்சி கிழக்கிற்கு விஜயம் செய்த அவரிடம் வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு சில தினங்களுக்கு முன்பு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,அப்பகுதியில் ஆளும் கட்சியின் துணையுடன் சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இளங்குமரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத தொழில்களை எவ்வாறு நிறுத்துவது என்பது எங்களுக்கு தெரியும்

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் நட்பு ரீதியாக என்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் முக்கியமாக அவர் தெரிவித்த விடயம் என்னவென்றால், “youtubers என்னை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் என்னை வைத்து பணம் சம்பாதிக்க நான் எவரையும் அனுமதிக்க மாட்டேன் ஆகவே நானே youtube செய்து நான் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

“ஆகவே அர்ச்சுனா இராமநாதனின் இலக்கு பணம் சம்பாதிப்பது. இன்று 15 கோடி புலம்பெயர் மக்களை ஏமாற்றி அவர் பணம் சம்பாதித்திருக்கிறார். ஆனால் இப்போது பணம் கொடுத்த புலம்பெயர் தேச மக்களும் கொடுக்காத மக்களும் அர்ச்சுனாவை பற்றி உணர்ந்து விட்டார்கள்.

அதனால் அவர்களுடைய தொடர்பு இல்லாததால் தற்போது அச்சுனா நாமலை வைத்து ஐஸ்லாந்து ஜனாதிபதி நாமலின் தலைமையின் கீழ் சுகாதார அமைச்சராக இருந்து கொண்டு எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று கற்பனை காணுகிறார்.ஆகவே அர்ச்சுனா இராமநாதனும் விரைவில் சிறை செல்ல நேரிடும்.

வெளிநாட்டு வாழ் உறவுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களையே கேவலப்படுத்தும் ஒருவர் தான் இராமநாதன் அர்ச்சுனா

புலம்பெயர் உறவுகள் தங்களுடைய தாய் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஏதோ ஒரு நம்பிக்கையில் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பெருந்தொகையான பணத்தை வழங்கினார்கள்.

அவருக்கு இங்கு கட்சிக்காரியாலயம் என்று ஒன்றும் இல்லை நாமலின் வீட்டில் இருப்பதாக நான் உணர்கிறேன்

இவ்வாறு ஊழலில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனாவிற்கு வட மாகாண மக்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று இளங்குமரன் எம்பி மேலும் தெரிவித்தார்.

பூ லின்ரன் யாழ்ப்பாண செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here