அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

137
0
Spread the love

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய (02.02) தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க சந்தை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை 12,000 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கம் 338,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை ’24 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 368,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை ’24 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 380,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here