உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

500
0
Spread the love

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், வடக்கு, தெற்கு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒன்று நேற்றைய தினம்(16.10) வியாழக்கிழமை மடு குஞ்சுகுளம் புனித லூர்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

மன்னார் தள்ளாடி 54 வது காலாட்படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபயகோனின் பணிப்புரையின் பேரில்,

வாரியபொல சுமங்கல மத்திய கல்லூரியின் ஒருங்கிணைப்பிலும் மன்னார், 542 வது காலாட்படை படைத் தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.டபிள்யூ.சி. அசுரசிங்கவின் மேற்பார்வையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாரிய பொல மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் மன்னாருக்கு வருகை தந்து மன்னார், மடு பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்கள பாடசாலை மற்றும் புனித லூர்து மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வில், மன்னார் தள்ளாடி 54 வது காலாட்படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபயகோன், 542 வது காலாட்படை தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.டபிள்யூ.சி. அசுர சிங்க 542 வது காலாட்படை படையணியின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.ஏ.என்.டி. ஜெயசுந்தர மற்றும் வாரியபொல மகாவித்தியாலய ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here