மனோரமாவின் மகன் காலமானார்

80
0
Spread the love

நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல் நல குறைவு காரணமாக தனது 70 ஆவது வயதில் இன்று (23.10) காலமானார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த பூபதி மூச்சு திணறல் காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா.

குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மனோரமா காலமானார்.

மனோரமாவின் ஒரே மகன் பூபதி . அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா பல முயற்சிகள் எடுத்தார்.

எனினும், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இருப்பினும், நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அவரது மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here