முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் மாற்றம்?

126
0
Spread the love

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும்,
அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5
ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 294 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here