வடக்கு பாணந்துறை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் Facebook ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் நால்வர் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களென தெரிவிக்கப்படுகிறது.
ஏனையவர்களிடமிருந்து தலா 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை, கேகாலை, பதுளை மற்றும் தெஹிவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







