நியூசிலாந்தை உலுக்கும் புயல்

77
0
Spread the love

நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது.

மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை பெய்தது.

இதனால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகள், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

5,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

எயார் நியூசிலாந்து நிறுவனம் 90 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

வங்காரே. பார் நார்த் மற்றும் பே ஆப் பிளெண்டி ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புயல் தற்போது தெற்கு நோக்கி நகர்ந்து ஹாக்ஸ் பே வழியாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் மற்றும் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர். மாயமான 11 பேரை தேடி வருவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here