ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

91
0
Spread the love

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.

அதனை நீடிக்காவிட்டால் மீண்டும் போர்ச் சூழல் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள ட்ரம்ப், எனினும் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here