அமெரிக்கா – இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தார்.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றையும் வௌியிட்டார்.
அதற்கமைய, தற்போது இந்தியா மீது மேலும் 25 சதவீதம் மேலதிக வரி விதிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.







