இந்தியாவில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் 25 பில்லியன் டொலர் இழப்பு

32
0
Spread the love

2025 ஆம் ஆண்டில் மட்டும் டிஜிட்டல் நிதி மோசடிகளால் இந்தியர்களுக்கு 25 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4,300% அதிகரிப்பாகும் என்பதுடன், சுமார் 2.5 மில்லியன் மக்கள் இவ்வாறான மோசடிகளுக்குப் பலியாகியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையைக்கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போன்ற போலி இணைப்புகளை குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பி வருகின்றனர்.

உதாரணமாக, போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் செய்திகளில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்த முற்படும்போது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுகின்றது.

உளவியல் ரீதியாக ஒருவரை அச்சப்படுத்தியோ அல்லது அவசர நிலையை ஏற்படுத்தியோ இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், சட்டங்களினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுடன் நுகர்வோர் விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here