இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் அரசுகளுக்கிடையேயான (G to G) வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்கள் இன்று (06) காலை சுமார் 8.20 மணியளவில் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்தூவ சந்திக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்காக தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை வேலை ஒப்பந்தங்களில் இணைக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக பல தடவைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்த போதிலும், இதுவரை திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும், இதேவேளை தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் லக்ஷித விதுரங்க உள்ளிட்ட சுமார் 250 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது







