UNODC பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு

37
0
Spread the love

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு) மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் (UNODC) தெற்காசிய பிராந்திய பிரதிநிதி கிறிஸ்டியன் ஹோல்கே தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் தற்போதைய பாதுகாப்புத் தேவைகள் மற்றும் UNODC ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய மேலதிக உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் கடல்சார் தகவல்களை நீதிமன்றச் சான்றுகளாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் 2026ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படைக்கு UNODC வழங்கிய உதவிகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

மேலும், மனிதக் கடத்தலுக்கு எதிரான தேசிய பணிக்குழுவின் முன்னேற்றம், தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள் மற்றும் ஆட்கடத்தல் அச்சுறுத்தல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக 2026 செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்ட பிராந்தியத் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here