‘சிரிலிய சவிய’ நிதி முறைகேடு வழக்கு – முன்னாள் முதல்லேடி சிரந்தி ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு!

56
0
Spread the love

‘சிரிலிய சவிய’ நிதியம் தொடர்பான விசாரணை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவுக்கு அக்டோபர் 16, 2026 அன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவர் 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் (1 கோடி) ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்

‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து சிரந்தி ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான், அவரை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான சுமார் 10 மில்லியன் ரூபா பணம், எந்தவித முறையான அனுமதியுமின்றி சட்டவிரோத முறையில் ‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here