உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘America Party’ எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் தனது X தளத்தில்
பதிவிட்டுள்ளார்.
மஸ்க்கின் புதிய கட்சி, அமெரிக்க தேர்தல் அதிகாரிகளால் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் புதிய கட்சியை யார் வழிநடத்துவார்கள் அல்லது கட்சியின் அமைப்பு என்பன தொடர்பில் மஸ்க் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.







