தாய்லாந்து பிரதமர் அதிரடியாக பதவி நீக்கம்

168
0
Spread the love

தாய்லாந்து அரசியலமைப்பு பேரவையினால் அந்நாட்டு பிரதமர் பேடோங்டான் ஷினவாத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கம்போடிய முன்னாள் தலைவர் ஹூன் சென்னுடன் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு கசிந்ததால்
இந்த அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து இராணுவத்தை விமர்சிக்கும் வகையில் அவர் தொலைபேசியில் உரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் நாட்டு மக்களுக்கு தெரியவந்ததையடுத்து, பிரதமர் ஷினவாத்ராவிற்கு எதிராக மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008 ஆம் ஆண்டு தாய்லாந்தின் 05 ஆவது பிரதமராக பேடோங்டான் ஷினவாத்ரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது அரச துரோக செயற்பாடுகள் தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில் நீதிபதிகளின் தீர்மானத்திற்கமைய அரசியலமைப்பு பேரவை பிரதமர் பதவி நீக்கம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here