அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இன்று(21.09) முதல் மேலதிகமாக ஒரு இலட்சம் டொலர் வருடாந்த கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று(20.09) இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த கட்டணம் ஒரேதடவையில் செலுத்தப்பட வேண்டுமென வௌ்ளை மாளிகையின் செயலாளர் Karoline Leavitt தெரிவித்துள்ளார்.
அடுத்த 12 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கைநெறிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் கற்கையை முடித்த பிறகு அவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கற்கையை நிறைவு செய்யும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.







