ஹார்முஸ் நீரிணை குறித்த அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது ஈரான்

63
0
Spread the love

நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவில் கப்பல்கள் மட்டுமே நீரிணை வழியாகச் செல்ல அனுமதி

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையை ஈரான் மறுத்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாக இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் பயணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்திருந்தது. எனினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவில் கப்பல்கள் மட்டுமே நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் கூறியுள்ளது.

அத்துடன், ஹார்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் எதிராகக் கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here