கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம்

148
0
Spread the love

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவு காரணமாக தனது 77 ஆவது வயதில் அவர் இன்று சனிக்கிழமை காலமானார்.

மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது.

மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here