வின்ட்சர் கோட்டையில் ட்ரம்புக்கு அமோக வரவேற்பு

138
0
Spread the love

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸை இன்று (17.09) சந்தித்தார்.

பிரித்தானியாவுக்கு ட்ர்ம்ப் 03 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளில் மன்னர் சார்லஸை சந்தித்துள்ளார்.

இதன்போது ட்ரம்பிற்கு அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதேவேளை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ட்ரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here