“நான் தற்போது வாடகை வீட்டிலேயே வசிக்கிறேன்” – ரவி மோகன் உருக்கம்

76
0
Spread the love

 

“நான் பிறந்து வளர்ந்தது சொந்த வீட்டில் தான். ஆனால், தற்போது வாடகை வீட்டிலேயே வசிக்கிறேன்” என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் நடிக்கும் 40 ஆவது படத்துக்கு ‘3 BHK’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘
குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நடிகர் ரவி மோகன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த படம் எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வீடு கட்டும் கனவுடன் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இறுதியில் அவர்களின் கனவு சாத்தியமா இல்லையா என்பது கதையாக இருக்கின்றமை தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here